சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பன்டினோ, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் மகிந்த ராஜபக்ஷ கிண்ணத்திற்காக, நான்கு நாடுகள் பங்கேற்கும் இறுதிப் போட்டியில் இவர் விசேட அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
வெற்றி பெறும் அணிக்கு வெற்றியாளர் கிண்ணத்துடன் 30 ஆயிரம் அமெரிக்க டொலர் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று அனுராதபுரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்திய அவர் ,இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்திருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.