ஆளும் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியது.
கொழும்பு – நகர சபையில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி, லிப்டன் சுற்று வட்டாரத்தில் முடிவடைந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, பெரும்பாலானோர் கலந்துக்கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மிக நீண்ட நாட்களுக்கு பின்னர், பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியாக இது அமைந்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியினால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.