கேகாலை, கலிகமுவ, கன்னாகொட பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தற்போது இராணுவம் மற்றும் நிவாரண குழுக்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.
வீட்டில் இருந்த ஒருவர் தற்போது மீட்க்கப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் வசித்த மேலும் இருவரை தேடும் பணி வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது.