நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு என்று பகுதி பகுதியாக சிலதை விற்பனை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரங்கள் நிறைவேற்றப்படும் போது கண்மூடிக்கொண்டிருந்த அரசாங்க உறுப்பினர்கள் தற்போது தான் கனவுகளில் இருந்து விழித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் சுவர்களில் ஓவியம் தீட்டிய இளம் தலைமுறையினர் கடவுச்சீட்டு வரிசைகளில் இருக்கிறார்களா என்று பார்ப்பதற்கு இப்போது தான் ஆட்சியாளர்களின் கண்கள் திறந்துள்ளனவா என்று அரசாங்கத்திடம் வினவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தலைமையில் இன்று (03) கேகாலை நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதோடு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தின் பாதை தவறானது என அரசாங்கத்திலிருந்து கொண்டே தெரிந்தால் வரப்பிரசாதங்கள் சலுகைகளுக்காக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்காமல் மக்கள் போராட்டத்தில் வந்து இனைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.
அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக அரசாங்கம் தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த தன்னிச்சையான பழிவாங்கலுக்கு எதிராக முழு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து முன் நிற்பார்கள் என்றும் தெரிவித்தார்.
உண்மை பேசும் அருட்தந்தைகளை தன்டனைக்குட்படுத்துவது,
உண்மைக்காக முன் நிற்கும் குடிமக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நிபந்தனையின்றி தான் முன் வந்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.