நேற்று காலை கிண்ணியாவில் ஏற்பட்ட படகுப்பாலம் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்ற திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கவலையில் ஆழ்ந்திருக்கும் சகோதரர்களுக்கு தனது ஆழ்ந்த கவலைகளைகளையும் ஆறுதலையும் கூறினார்.
கிண்ணியாவில் நேற்றைய தினம் படகுப்பாலம் கவிழ்ந்து அசம்பாவிதம் ஏற்பட்டதில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த உயிரிழப்புக்கு பிரதான காரணமாக கூறப்படும் பாலம் அமைக்கும் பணியின் தாமதம் தொடர்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே பாராளுமன்றில் கேள்வியெழுப்பி குறித்த பாலத்தின் பணிகளை அவசரமாக முடித்துத் தருமாறு இம்ரான் மஹ்ரூப் கோரியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.