Our Feeds


Wednesday, November 17, 2021

Anonymous

PHOTOS: நுகர்வோரின் பாவனைக்கு உதவாத 40 ஆயிரம் கிலோவுக்கு மேல் உருளைக் கிழக்கு கொள்கலன் கண்டுபிடிப்பு

 



நுகர்வோரின் பாவனைக்கு உதவாத உருளைக் கிழங்கு கொள்கலன் ஒன்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள தனியாா் களஞ்சியமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக கருதப்படும் இந்த உருளைக் கிழங்கு தொகை பெண் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தி முளைவிட்டுள்ள உருளைக் கிழங்குகளின் கன்றுப் பகுதிகளை அகற்றி அவற்றை மீண்டும் சந்தைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்த உருளைக் கிழங்கு தொகை மாநகர சபையினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலனில் 40 ஆயிரம் கிலோவுக்கு அதிக தொகை உருளைக் கிழங்கு இருந்ததாகவும் அவை பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும் தம்புள்ளை மாநகர சபை அறிவித்துள்ளது.

தம்புள்ளை மாநகரசபையின் தலைவர் ஜனாலிய ஓபாதவுக்கு கிடைத்த தகவலுக்கமைய மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »