Our Feeds


Tuesday, November 9, 2021

Anonymous

PHOTO: கொழும்பில் வீதியை கடந்த கொரோனா - வித்தியாசமான ஆர்ப்பாட்டம்

 



ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதி செயலகத்துக்கு அண்மித்த பகுதியில், “ஆர்ப்பாட்ட இடம்” ஒதுக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.


அந்த இடத்துக்கு முன்பாக, வீதியோரத்தில் நூதனமான ஆர்ப்பாட்டமொன்று இன்று (09) முன்னெடுக்கப்பட்டது. இறுதியில், பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில், அந்த கொரோனா ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை கடந்து, மறுபக்கத்துக்குச் சென்றனர்.

இவை தொடர்பிலான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் கொரோனா தொற்றுக்கு எதிரான ஆடையை அணிந்திருந்த சிலரும், கொரோனாவைப் போன்று வேடமிட்டிருந்த ஒருவரும், இவ்வாறான நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில், “முகக்கவசத்தை அணிவோம்” “ கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »