‘எமது மக்கள் சக்தி’ கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கட்சி உறுப்புரிமையில் இருந்தும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் அத்துரலியே ரதன தேரரை நீக்குவதற்கு ‘எமது மக்கள் சக்தி’ கட்சி தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
கட்சியினால் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்துக்கு எதிராக அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
‘எமது மக்கள் சக்தி’ கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் நீண்ட இழுபறி நிலவிய பின்னரே, அதற்கு ரத்ன தேரர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.