தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி மோசம் எனில், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு யாருக்கு ஆட்சியை வழங்குவீர்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிகழ்வொன்றில் பங்குபற்றியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் ஆட்சியை வழங்கிவிட்டால், மக்கள் வரிசையில் நிற்க மாட்டார்களா, நாட்டில் டொலர் நெருக்கடி தீர்ந்துவிடுமா, எரிபொருள் விலை குறைந்துவிடுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கமோ அல்லது ஆட்சியாளரோ மாறினாலும் தற்போதை நிலைமையை எவராலும் மாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆராச்சி குறிப்பிட்டார்.