தான் வணங்கும் கடவுளையே இழிவுபடுத்திய ஞானசார தேரர் போன்ற ஒருவருக்கு “ஒரே நாடு ஒரே சட்டம்” என சட்டத்தை உருவாக்கக் கொடுத்து விட்டு நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு உள்ளாடையும், ஆடையும் அணிந்து கொண்டிருக்க முடிகிறதா? என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ கேள்வியெழுப்பினார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என நாம் குரலெழுப்பி வருகிறோம். அதற்கான காரணங்களை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளோம்.
ஆனால், ஞானசார தேரர் காவி உடையை அணிந்து கொண்டு வந்து முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ்வை குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி எனக் கூறி கேவலப்படுத்தினார்.
இப்படியான ஒருவருக்கு “ஒரே நாடு ஒரே சட்டம்” என சட்டத்தை உருவாக்கக் கொடுத்து விட்டு நீதி அமைச்சர் அலி சப்ரி உள்ளாடையும், ஆடையும் அணிந்து கொண்டிருக்க முடிகிறதா? என நான் கேட்க்க விரும்புகிறேன் ச்சீ...
நீதி அமைச்சர் வணங்கும் இறைவனை குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி எனக்கூறியவருக்கு சட்டம் உருவாக்க கொடுத்துள்ளமைக்கு அலி சப்ரிக்கு வெட்க்கம் இல்லையா? அவர் டை, கோட் போட்டு பாராளுமன்றில் இருக்க வேண்டுமா? என எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இன்று நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.