தங்களுக்கு வரிச் சலுகையுடன் விரைவில் வாகன அனுமதிப் பத்திரம் வழங்குமாறு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம்
மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சில வருடங்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் வாகன இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததோடு, இதனூடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உருவானது.
இந்த செயற்பாட்டின் காரணமாக தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தாங்கள் வாடகை வாகனங்களின் ஊடாகவே நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருவதாக சில பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.