Our Feeds


Tuesday, November 2, 2021

SHAHNI RAMEES

MP பாட்டலி சம்பிக்க ரணவகவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு


 பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, குறித்த வழக்கை நவம்பர் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய திலும் துசித்த குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »