ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தி நாடாளுமன்ற அமர்வில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா்.
நேற்றைய தினம் (16) ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணியில் பொலிஸாரினால் ஏற்பட்ட இடையூறுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அது தொடர்பில் விசாரணை செய்யுமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.