Our Feeds


Friday, November 19, 2021

Anonymous

🛑LIVE VIDEO: சிலி நாட்டில் சிவப்பாய் காட்சி தரும் சந்திரன்

 


சிலி நாட்டின் தலைநகரான சண்டியாகோ நகரில் சந்திரகிரகணம் கட்சியளித்துள்ளது.


இந்த சந்திரகிரணம் சிவப்பு நிழலை வீசுவதாக சரை்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்பட்டு வருகின்றது.

இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32க்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும்.

இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது. எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்திரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் தென்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »