நாட்டின் பல பகுதிகளில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக கோதுமை மா, நிறுவனத்தினால் விநியோகிக்கப்படவில்லை என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனால், நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை முதல் பேக்கரி உற்பத்திகளை தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி மற்றும் உணவக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
எதிர்வரும் தினங்களில் கோதுமை மா விநியோகிக்கப்படும் என வர்த்தக நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை கோதுமை மா உரிய வகையில் தமக்கு கிடைக்கவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.