தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தினால், தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல வாகனங்கள் மோதுண்டுள்ளதாக அதிவேக வீதியின் கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.
ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அறிய முடியவில்லை எனவும், தமது குழு அந்த பகுதியை நோக்கி விரைந்துள்ளதாகவும் கட்டுப்பாட்டு அறை குறிப்பிடுகின்றது.