Our Feeds


Saturday, November 13, 2021

SHAHNI RAMEES

பட்ஜட்டில் எவ்வித தீர்வும் இல்லை! - J.V.P. சுட்டிக்காட்டு!

 


2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எவ்வித தீர்வும் பரிந்துரைக்கப்படவில்லை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சரால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சேதன உரத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டால் நஷ்டஈடு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்து வந்தாலும், இந்த வரவு - செலவுத் திட்டத்தில் அது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"பொருட்களின் விலை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு அதிகரித்துள்ளமை மற்றும் பொருட்களின் தட்டுப்பாடு என்பன நாட்டில் உள்ள பிரதான பிரச்சினைகளாகும்.

வரவு - செலவுத் திட்டத்தில் அரசின் செலவுகளாக 5.2 டிரில்லியன் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், வருமானமாக 2.2 டிரில்லியன் ரூபா மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 3 டிரில்லியன் ரூபா கடன் பெறும் வரவு - செலவுத் திட்டமாகும்.
இலங்கையின் வீழ்ச்சிப் பொருளாதாரப் பயணத்தை மாற்றியமைக்க எவ்வித திட்டமும் இந்தப் பட்ஜட்டில் இல்லை" - என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »