- இலங்கை சார்பில் இக்கௌரவத்தை பெறும் 3ஆவது வீரர்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) வழங்கப்படும் Hall of fame கௌரவத்துக்குரிய வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தென்னாபிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர் ஷோன் பொலொக் (1995 2008), இங்கிலாந்தின் ஜனட் பிரிட்டின் (1979 - 1998) ஆகியோரும் இக்கௌரவத்தை பெறுபவர்கள் பட்டியலில் இணைத்துள்ளதாக, இன்றையதினம் (13) ICC அறிவித்துள்ளது.
அந்த வகையில் இக்கௌரவத்தை பெறும் 3ஆவது இலங்கை வீரராக மஹேல ஜயவர்தன (1997 - 2015) தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னர் குமார் சங்கக்கார மற்றும் இலங்கையிலிருந்து முதன்முறையாக முத்தையா முரளிதரனும் இக்கௌரவத்திற்கு பாத்திரமானவர்களாக இருக்கின்றனர்.