சர்வதேச கால்பந்து சம்மேளன (FIFA) தலைவர் கியானி இன்ஃபன்டினோ, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு
இலங்கையை வந்தடைந்துள்ளார்.அறிக்கை ஒன்றை வெளியிட்டு சர்வதேச கால்பந்து சம்மேளனம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் மகிந்த ராஜபக்ஷ கிண்ணத்திற்காக, நான்கு நாடுகள் பங்கேற்கும் இறுதிப் போட்டியில், இவர் விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி ஆரம்பித்த இந்த போட்டிகளில் இலங்கை , மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.
வெற்றி பெறும் அணிக்கு வெற்றியாளர் கிண்ணத்துடன் 30.000 அமெரிக்க டொலர் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.