எஃப்.பி.ஐ மின்னஞ்சல் கணக்கிலிருந்து ஆயிரக்கணக்கான போலி மின்னஞ்சல் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஆய்வுகளிலிருந்து தெரியவந்ததை அடுத்து , சைபர் தாக்குதல் நடக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளளன.
இந்த மின்னஞ்சல் செய்திகள் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இலாப நோக்கற்ற ஸ்பேம் எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பான Spamhaus அமைப்பு, இது அதிநவீன சங்கிலித் தாக்குதலாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஊடகங்களின் அறிக்கைப்படி இவ்வாறு ஒரு இலட்சம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
@ic.fbi.gov என்ற மின்னஞ்சல் கணக்கிலிருந்து இவ்வாறான போலி மின்னஞ்சல்கள் தொடர்பில் அறியக்கிடைத்திருப்பதாக FBI தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கண்டறியப்பட்டதும் சம்பந்தப்பட்ட வன்பொருள் (hardware ) நிறுத்தப்பட்டதாகவும் (offline), அடையாளம் தெரியாத மின்னஞ்சல்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல்கள் அல்லது செயற்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தனிநபர் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதா அல்லது ஹெக்கா்களினால் முன்னெடுக்கப்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடப்படுகின்றது.