செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக ஒளிபரப்பாகும் டயலொக் தொலைக்காட்சி சேவைக்கு நாடு முழுவதும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்மதி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட இடையூறு இதற்கான காரணம் என டயலொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டயலொக் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை :
“எமது செய்மதி தொழில்நுட்பத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தடங்கலினால், Dialog Television ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்பட்டுள்ளமையை கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். சேவையை விரைவில் வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். சேவைகள் வழமைக்கு திரும்பியவுடன், உங்களுக்கு அறிவிக்கப்படும். இதனால், உங்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு எமது கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்”
என டயலொக் நிறுவனம் அறிவித்துள்ளது.