அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில்
மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.கலாநிதி சிறில் காமினி உட்பட பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணையை விரைந்து முடித்து, முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சி.ஐ.டி, கௌரவ சகோ. சிறில் காமினியிடம் மூன்று நாட்களாக வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.