இரண்டு தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஊடாக தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டமைக்கான செயலி (APP) ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.