கிண்ணியாவில் படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்படலாமென அறியமுடிகின்றது.
கிண்ணியா – குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்திற்காக படகு சேவைக்கு கிண்ணியா நகரசபை அனுமதி வழங்கியதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்த நிலையில் நகர சபைத் தலைவர் கைது செய்யடலாமென திருகோணமலை செய்திகள் தெரிவிக்கின்றன.
நகர சபைத் தலைவரை விசாரணைக்கு அழைக்கவுள்ள பொலிஸார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.