பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயுவை உள்ளடக்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
அதன்படி, 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் தாங்கிய சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது.
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.