கேகாலை − ஹத்னாகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் ஒருவர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும், அனர்த்தத்தில் இருவர் காணாமல் போயுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிலையம் கூறுகின்றது.
தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, தாய் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குருநாகல் − ரிதிகம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.