கொழும்பில் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் பொலிசாரினால் தேடப்பட்டு வந்த மூன்று முஸ்லிம் சிறுமிகளும் கிடைத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று 08ம் திகதி காலை வீட்டை விட்டு குறித்த மூன்று பேரும் வெளியேறிய நிலையில் அவர்கள் காணாமல் போய்விட்டதாக பெற்றோர்கள் சார்பில் கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மாலை குறித்த 3 பேரும் பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
மூன்று பேரும் ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறும் CCTV VIDEO காட்சி