ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹசிம் குறித்து தொடர்பில், தாக்குதல்களுக்கு முன்னதாகவே முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரச புலனாய்வு சேவையின் (SIS) தலைவர் நிலந்த ஜயவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கையின் சில பகுதிகளை இராஜாங்க அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஆவணம் ஒன்றை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர், முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய பொதுச் செயலாளரான அப்போதைய சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதகவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்களுக்கு 11 மாதங்களுக்கு முன்னர் சஹ்ரானை கைது செய்யுமாறு நிலந்த ஜயவர்தனவினால் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டாரவுக்கு அறிவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.