அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும்
இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.அரசாங்கம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவேன் என நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகலில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுளய்ளாா். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தனிநபர்கள் ஒருவழியாக பிரசாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் இன்னும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறோம்.
”
ஊடகவியலாளர் – அரசாங்கத்தின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தை ஏற்படுத்தவில்லையா?
– “இல்லை, ஏமாற்றம் இல்லை. அந்த நேரத்தில் எங்களிடம் இருப்பதை நாங்கள் எதிர்கொள்கிறோம். எனவே நாங்கள் உருவாக்கிய அரசாங்கங்கள், நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி. எனவே, பலவீனங்களைப் பாதுகாப்பதே நம்பிக்கையாகும். அரசாங்கத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை முன்னோக்கி நகர்த்த வேண்டியதே எங்களின் கடமை. எனறு குறிப்பிட்டுள்ளாா்.