டி20 உலகக் கிண்ண தொடரில் இன்று இடம்பெற்ற சூப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தென்னாபிரிக்க அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென் 94 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
மெக்ரம் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், டி கொக் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அதன்படி வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் மொய்ன் அலி 37 ஓட்டங்களையும் டேவிட் மாலன் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்
பந்து வீச்சில் இறுதி ஓவரில் ககிசோ ரபாடா ஹெட்ரிக் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றிப் பெற்றிருந்தாலும் புள்ளிகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.,