Our Feeds


Thursday, November 25, 2021

SHAHNI RAMEES

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துங்கள் - தலதா அதுகோரல

 

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு ஏதேனும் உளவியல் ரீதியிலான பிரச்சனைகள் இருக்கின்றதா?

அவ்வாறு இருப்பினும்  மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக்கொண்டுள்ள வரவு செலவுத் திட்ட  விவாதத்தின் போது பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக ஆளுங்கட்சி உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இரண்டாவது நாளாகவும் பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சனை எழுப்பியபோதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரட்ண எம்.பி தொடர்பில் திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பியை சபாநாயகர் எச்சரித்தார். ஆனால் எச்சரிப்பதை மட்டமே நாம்  ஏற்றுக்கொள்ளவில்லை. 

நிலையியல் கட்டளைக்கு அமைய அவரிடம் இருந்து அதற்கு மேலான நடவடிக்கை ஒன்றையே எதிர்பார்த்தோம். அது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா எழுத்து மூலம் கோரிக்கையை விடுத்திருந்தார். அதேபோன்று நானும் வாய்மூலம் அந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.

சபாநாயகர் தீர்மானத்தை அறிவித்த பின்னர் திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி, மீண்டும் அது தொடர்பில் விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தையே வெளியிட்டார். 

ஆகவே இந்தப் பிரச்சனை இன்னமும் முடிவடையவில்லை. நாங்கள் பெண் எம்.பிக்கள் அமைப்பு என்ற ரீதியில் இது குறித்து எடுக்கப்படும் இறுதித் தீர்மானம் என்னவென கேட்கின்றோம்.

இது தொடர்பில் அவர் கவலையை வெளியிடுவரா? அல்லது இது தொடர்பில் சபாநாயகர் தீர்மானத்தை அறிவிப்பாரா? அவ்வாறு இல்லாவிட்டால் அந்த எம்.பிக்கு ஏதேனும் உளவியல் ரீதியிலான பிரச்சனைகள் இருக்கின்றதா? என்று சுகாதார பரிசோதனைகளுக்காவது உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுகின்றேன் என்றார்.

இதன்போது பதிலளித்த பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ,

 நான் அறிந்தவகையில் சபாநாயகர், இந்த விடயம் தொடர்பில் நேற்று (நேற்று முன்தினம்) தெளிவான கூற்றொன்றை முன்வைத்துள்ளார். எவ்வாறாயினும் இன்று நீங்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கின்றேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »