எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாளை மறுதினம் (16) ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி பொலிஸார் நீதிமன்றை நாடியுள்ளனர். இது தொடர்பில் நாளை (15) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில், தடைக் கோரிக்கைக்கான வாதங்கள் முன்வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 9 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட சுற்றுநிருபத்தை மையப்படுத்தி , கொவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்துவதை முன்னிறுத்தி இந்த தடை உத்தரவுக்கான கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இதற்கான முயற்சிகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். அன்றைய தினம் பொலிஸாருக்காக நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்னிலையாகி, 16 ஆம் திகதி இடம்பெற ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய கோரிக்கை முன்வைத்திருந்தார்.