சீனாவின் சர்ச்சைக்குரிய சேதன பசளையை நிராகரித்தமை உள்ளிட்ட காரணிகள் அடங்கிய விரிவான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை சீன தூதரகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையை இந்த வாரத்திற்குள் சீன தூதரகத்தில் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், இன்றைய தினம் அந்த அறிக்கை கையளிக்கப்படமாட்டாது என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.