தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழு முன்னிலையில் மூன்று ஊடக நிறுவனங்கள் நாளை (26) சாட்சியமளிக்கவுள்ளன.
அதற்கமைய, டெல்ஷான் ஊடக வலையமைப்பு, வொய்ஸ் ஒப் ஏசியா ஊடக வலையமைப்பு மற்றும் எம்.டீ.வீ. ஊடக வலையமைப்பு ஆகியன சாட்சியமளிக்கவுள்ளதாக குழுவின் செயலாளரும், நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
நாடாளுமன்ற விசேட குழுவின் தலைவரும், சபை முதல்வருமான அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் பிற்பகல் 02.00 மணிக்கு குழு கூடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.