கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாய பகுதியை சீர்செய்து,
வர்த்தக நிலையங்களை புனரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.பாராளுமன்ற விசேட அமர்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் இது தொடர்பான அறிவுறுத்தல் நேற்று (23) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உரிய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் குழுவினரும், கடுகண்ணாவ வர்த்தகர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிய வருகின்றது.
பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தை அடுத்து, கடந்த 10ம் திகதி அந்த வீதியூடான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, பின்னர் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.