புத்தளம், ஆராச்சிகட்டுவ, வைரஸன்கட்டுவ பகுதி வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வாயு ஒழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் மணல் மற்றும் நீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர்.பின்னர் வெற்று வயற்காணிக்குள் அதனை வீசி தீயை அணைத்துள்ளனர்.