முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் தான் 60 வயதுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.