Our Feeds


Monday, November 1, 2021

Anonymous

பஜ்ஜட்டின் பின்னால் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - புது முகங்களுக்கு வாய்ப்பு

 



2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உடனடி அமைச்சரவையை மறுசீரமைப்புச் செய்வது குறித்து அரசின் உயர்மட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டார தகவல்கள் தெரிவித்தன.


அதன்படி, புதிய முகங்களுக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு உத்தேசித்துள்ள துடன், மேலும் சிலருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகளையும் வழங்குவதற்கு கலந்தாலோசிக்கப்படுவதாகவும் அறிய முடிந்தது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட் டம் 2021 நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டு 2021 நவம்பர் 22 ஆம் திகதி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, வரவு செலவுத் திட்டம் தொடர் பான செயற்குழு விவாதம் 2021 நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2021 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதுடன், வரவு செலவுத் திட்டம் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பை 2021 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரவு – செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்போதுள்ள அமைச்சரவையில் சில சில மாற்றங்கள் முன்னெடுப்பது குறித்து அரசின் உயர் மட்டத்தில் கலந்தாலோசிக்கப்படுவதாக அறிய முடிந்தது.

(யோ.தர்மராஜ்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »