வெளிநாடு செல்பவர்கள் தமது விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த திணைக்களத்தில் பதிவு செய்த பின் வெளிநாடு சென்றோருக்கு ஏற்படும் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்குத் தீர்வு பெற்றுத்தர முடியுமென என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவு செய்யாமல் தொழில்களுக்குச் சென்ற பலர் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
உரிய பதிவின்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த பணியகத்தில் பதிவு செய்யப்படாமல் வெளிநாடு சென்றவர்களும் தம்மை பதிவு செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.