ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரைடவுள்ளேன்.
வெளிநாடு ஒன்றுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பியதுடன் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்க்கிறேன் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் நீதி அமைச்சர் என்ற வகையில் அவர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.