கொழும்பு 02, நவம் மாவத்தையில் அமைந்துள்ள பிரபல சலூன் ஒன்றின் உரிமையாளர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்தில் உள்ள பெண் ஒருவரின் சகோதரரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பின் இவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் அநுராதபுரம் எலயபத்துவ பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவரை பார்க்க சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குறித்த பெண்ணின் சகோதரனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தகராறு முற்றியதால் ஏற்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் சகோதரர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் சகோதரரை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.