ஐந்து மாவட்டங்களில் கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன நிலைமை மோசமடையலாம் என எச்சரித்துள்ளார்.
அனுராதபுரம் அம்பாறை அம்பாந்தோட்டைமாத்தறை காலி மாவட்டங்களில் கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களை மீறி குறிப்பிட்ட பகுதிகளில் இடம்பெற்ற திருமணங்கள் மதநிகழ்வுகள் ஏனைய நிகழ்வுகள் காரணமாக இந்த கொத்தணிகள் உருவாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை மீறி பொதுமக்பொதுமக்கள் ஒன்றுகூடினால் எங்களால் இந்த கொத்தணிகளை தடுக்க முடியாமல் போய்விடும் என அவர் எச்சரி;த்துள்ளார்.