LP கேஸ் சிலிண்டர்களில் கலவை மாற்றத்தால் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கின்றதாக வெளிவரும் கருத்துக்களை லாஃப்ஸ்
கேஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது.லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் குலமித்ர பண்டார இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,
அத்தகைய அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை, ஏனெனில் கலவை அதன் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பராமரிக்கப்படுகிறது.
“LP எரிவாயு சிலிண்டர்களின் கலவை இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் விதிக்கப்பட்ட விவரக்குறிப்புகளின் படி பராமரிக்கப்படுகிறது. மேலும் Laughs Gas ஆல் தனித்துவமான தரநிலைகள் பராமரிக்கப்படும்” என்றார்.
லாஃப்ஸ் கேஸ் வழங்கும் எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் விதிக்கப்பட்ட SLS 1178/2013 தரத்தின் கீழ் தயாரிக்கப்படுவதால், ஒவ்வொரு Laughfs எரிவாயு சிலிண்டரும் பாவனைக்கு பாதுகாப்பானது என அவர் குறிப்பிட்டார்.