எதிர்காலத்தில் பைஷர் தடுப்பூசியை மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
1 ஆவது மற்றும் 2 ஆவது டோஸ்களை வழங்குவதற்கு நாட்டில் போதுமான ஏனைய தடுப்பூசிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது சுகாதார அதிகாரிகளின் பிரதான இலக்கு பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதும் பூஸ்டர் டோஸை வழங்குவதும் எனவும் அவர் தெரிவித்தார்.
14.5 மில்லியன் பைஷர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான தடுப்பூசிகளை வாராந்த அடிப்படையில் விநியோகிக்க உற்பத்தியாளர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.