Our Feeds


Thursday, November 11, 2021

Anonymous

ஞானசாரரை வைத்து ஒரே நாடு ஒரே சட்டம் உருவாக்க முடியுமென்றால், நாமல் கருணாரத்ன, ஸ்டாலினை வைத்து உரம், ஆசிரியர் பிரச்சினைக்கு செயலணி அமைக்கலாமே?

 



ஒரே நாடு ஒரே சட்டத்தை அதிகமாக பேசிய ஞானசாரரை வைத்து ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கினார் என்றால், ஏன் உரம், ஆசிரியர்கள் பிரச்சினைகளுக்கு நாமல் கருனாரத்ன, மற்றும் ஜோசப் ஸ்டாலினை வைத்து ஜனாதிபதி செயலணி அமைக்கவில்லை??


ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ நியமித்துள்ள ஜனாதிபதி செயலணி மீண்டும் பெரும்பான்மை சமூகத்தை சந்தோசப்படுத்த செய்யபட்ட வெறும் கண்துடைப்பேயாகும், 


ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பாக அதிகம் பேசியதன் காரணமாக ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரரை அன்மையில் ஜனாதிபதி நியமித்ததார்.


இந்நிலையில் உர பிரச்சினை தொடர்பாக அதிகம் குரல் கொடுக்க கூடியவர் தொழிற்சங்க தலைவர் நாமல் கருணாரத்னவாகும். ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் அதிகம் குரல் கொடுப்பவர் ஜோசப் ஸ்டாலின் என்பவராகும். அப்படியாயின் உர பிரச்சினை, ஆசிரியர் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் அதிகம் குரல் கொடுத்த ; தொழிற்சங்க தலைவர்களை கொண்ட ஜனாதிபதி செயலணியை ஏன் இன்னும் நியமிக்கவில்லை.


நாட்டு மக்களுக்கு தற்போதும் பாதிப்பு செலுத்தும் பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி செயலணி நியமிக்கப்படல் வேண்டும். குறிப்பாக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் இன்று அதிகம் குரல் கொடுப்பவர்கள் தலைமையில் கூட ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமிக்கலாமே?


எனவே மக்களின் பெரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் அக்கறை செலுத்தாமல் இனங்களுக்கு இடையில் பிரிவிணையை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்ப அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. சிங்கள மக்களை கவருவதற்கு எந்தவொரு துரும்பு சீட்டும் அரசாங்கத்திற்கு தற்போது இல்லை. சிங்கள மக்களை கவரும் நோக்கிலேயே குறித்த ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது இதனை பெரும்பான்மை சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை.


எனவே அரசாங்கத்தின் குறுகிய அரசியல் நோக்குகளை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.


ஹிதாயத் சத்தார் 

முன்னாள் உறுப்பினர் மத்திய மாகாண சபை, 

கண்டி மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »