40,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹம்மட் உவயிஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து குறித்த கப்பல் நாட்டிற்கு வருகை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது.
ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள், இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தில் உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.