உலகை தற்போது அச்சுறுத்திவரும் ‘ஒமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம்
செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர்,
” டெல்டாவைவிட ஆபத்தாகக் கருதக்கூடிய ஒமிக்ரோன் பிறழ்வு எமது நாட்டுக்குள் பரவும் அபாயமும் இருக்கின்றது. எனவே, இதனை தடுப்பதற்கு சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்களை ஏற்றியிருந்தாலும் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
எமது நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். அதற்கான பணி தற்போது ஆரம்பமாகியுள்ளமை வரவேற்கக்கூடிய விடயம். அதேபோல 60 வயதுக்கும் குறைவானவர்களுள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பபட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்கப்பட வேண்டும். ” – என்றார்.