Our Feeds


Friday, November 5, 2021

SHAHNI RAMEES

பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட கைகலப்பு | பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை


 வட்டவளை-மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று (04) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட கைகலப்பை சமரசம் செய்வதற்காக சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஹட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »