Our Feeds


Monday, November 29, 2021

SHAHNI RAMEES

சிலிண்டர் வெடிப்பு பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு கிடைக்குமாம் – அரசு அறிவிப்பு

 

எரிவாயு தொடர்பிலான பரிசோதனைகளுக்கு எமது நாட்டில் சிறந்த இரசாயன ஆய்வுக்கூடமொன்று இல்லை என்றும் இந்த வாரத்துக்குள் சமையல்

எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு தீர்வு கொடுக்கப்படுமென்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இன்று (29) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இன்று நேற்று நடந்தது கிடையாது. நீண்ட நாட்களாக இருந்துவரும் பிரச்சினை. ஆனால் நாட்டில் தற்போது நாட்டில் தற்போது இடம்பெறும் வெடிப்பு சம்பவங்கள்வழமைக்கு மாறானவையாகும்.

1960 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை எமது எரிவாயு தொடர்பில் பரிசோதனை செய்ய நாட்டில் சட்டபூர்வமான இராசயன ஆய்வுக் கூடமொன்று இல்லை. இதுவே உண்மையான நிலைமை.

இதுதொடர்பில் கடந்த வாரம் ஆய்வு செய்திருந்தோம். அந்த ஆய்வுகளின் முதல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. அதனை மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்திருந்தோம். ஒரு அறிக்கையை வைத்து இது தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியாது என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

அதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இரத்தினபுரி, குருநாகல், கம்பஹா, காலி, களுத்துறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 12 மாதிரிகளை பெற்றுக்கொண்டு பெற்றோலிய
கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அநேகமாக அந்த அறிக்கை இன்று கிடைக்கலாம்.

அந்த அறிக்கையை மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கவுள்ளோம். இந்த வாரத்துக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இதற்கு வழங்க வேண்டிய தற்காலிக தீர்வு, குறுங்கால தீர்வு, நீண்டநாள் தீர்வு என்பவற்றுக்கான ஆலோசனைகளை மொரட்டுவை பல்கலைக்கழகம் பெற்றுக்கொடுக்கும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »