அந்தமானின் காம்பெல் பேவில் இன்று (24) காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிச்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 94 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது. லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் இந்த நிலநடுக்கதால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை.
முன்னதாக ஒக்டோபர் 27 அன்று அந்தமானில் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.